2009 மே 18 இறுதி யுத்தத்தில் இந்தியாவின் முடிவு - திரைமறைவில் புதிய இரகசிய நகர்வுகள்
2009ஆம் ஆண்ட இடம்பெற்ற இனப்படுகொலையில் இந்தியாவின் பங்குதான் மிகமுக்கியமானது என்று பிரித்தானியாவில் இருக்ககூடிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தியா ஒரு ஜனநாயக நாடு எனில் பக்கத்து நாடான இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை பற்றி கேட்டிருக்க வேண்டும்.அப்படியொரு விடயம் நடைபெறவில்லை.
இன்றுவரையும் அதற்கு எதிராக நிற்பதோடு இலங்கை அரசை பாதுகாக்கும் முயற்சியில் தான் இந்தியா முனைப்பாக உள்ளது.
சீனா, ரஸ்யா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை இனப்படுகொலைக்கு காரணம் என்று கூறுகின்றார்கள்.
அவர்கள் எல்லோரும் பணத்திற்கு ஆயுதம் விற்றவர்கள். அதனை திட்டமிட்டு நடத்தியவர்களை விட்டு விட்டு ஆயுதம் விற்றவர்களை குறைகூறி பிரயோசனமில்லை என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி..
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு குறைவு - 3.4 மில்லியன் மக்கள் தொகை சரிவு News Lankasri