IPHONE பிரியர்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!
ஆப்பிள் (Apple) நிறுவனம், மடிக்கக்கூடிய ஐபோனை (IPHONE) 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேம்சங் (Samsung) உட்பட பல நிறுவனங்கள் தங்கள் மடிக்கக்கூடிய தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், மடிக்கக்கூடிய ஐபோனுக்கான (IPHONE) எதிர்பார்ப்பு சந்தைகளில் பன்மடங்கு அதிகரித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விபரங்கள்
அத்துடன் வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம், இந்த சாதனம், iPhone 18 தொடரின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் தலைமுறை மடிக்கக்கூடிய ஐபோன் 2,000 அமெரிக்க டொலர் முதல் 2,500 அமெரிக்க டொலரிற்கும் மேல் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த மடிக்கக்கூடிய ஐபோனின் முதன்மை திரை 7.9 முதல் 8.3 அங்குலங்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 22 மணி நேரம் முன்
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri