1999ஆம் ஆண்டை நினைவுப்படுத்திய போட்டி..! துரதிஷ்டத்தால் தோல்வியை தழுவிய இந்தியா
இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இன்று(14.07.2025) நடந்த 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.
குறித்த போட்டியின் முதலாம் இன்னிங்ஸில் இரண்டு அணிகளும் முறையே 387 ஓட்டங்களை குவித்தன. இதனையடுத்து, மீண்டும் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 192 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இந்நிலையில், 193 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ஆரம்பம் முதலே தனது விக்கட்டுக்களை வேகமாக பறிகொடுத்தது.
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுக்கள்
இதன்படி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 54 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து, 5ஆம் நாள் ஆட்டமான இன்றும், இந்திய அணியின் விக்கட்டுக்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வீழ்ந்தன.
ONE OF THE MOST HEARTBREAKING DEFEATS FOR INDIA. 💔 pic.twitter.com/0MF39tEHiD
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 14, 2025
கே.எல்.ராகுல் 39 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் 9 ஓட்டங்களில் ஆர்ச்சரின் ஓவரில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய, வொஷிங்டன் சுந்தர், ஓட்டங்கள் எடுக்காமல் ஆர்ச்சர் ஓவரில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழக்க தொடர்ந்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி 13 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
மேலும், நிதானமாக துடுப்பெடுத்தாடிய பும்ராஹ்வும் 54 பந்துகளில் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
துரதிஷ்டவசமான ஆட்டமிழப்பு
அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மறுமுனையில், நிதானமாகவும் சிறப்பாகவும் துடுப்பாடிய ரவீந்திர ஜடேஜா அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.
அவருக்கு உறுதுணையாக சிராஜூம் நிதானமாகா துடுப்பெடுத்தாடி வந்தார்.
எனினும், இன்னும் 22 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பஷீரின் பந்துவீச்சில் சிராஜ் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
Check this out - this happened in 1999 Chennai Test. Last pair on the crease, 13 runs to win. A Pak off-spinner got through to an identical dismissal! pic.twitter.com/JLn1jtPgb6
— Suleman (@Suleman_____) July 14, 2025
மறுமுனையில், ஜடேஜா 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த போதிலும் இந்திய அணி, 22 ஒட்டங்களால் தோல்வியை தழுவியது.
போட்டியின் ஆட்டநாயகனாக 2 இன்னிங்ஸிலும் மொத்தம் 77 ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, 1999ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிக்கெதிரான போட்டியில் இறுதி விக்கெட்டில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இதேபோன்று துரதிஷ்டவசமாக இந்தியா இறுதி விக்கட்டை பறிகொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் தவராசாவும் கருணாவால் இலக்கு வைக்கப்பட்டாரா! இரு தசாப்தம் கடந்து அவிழ்க்கப்படும் முடிச்சுக்கள்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
