எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு இன்று முற்பகல் சமுகமளித்த அவர், கையிருப்பிலுள்ள எரிபொருளின் அளவு குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தொடர்ந்து, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது.
அண்மைய நாட்களாக, நாட்டில் மக்கள் எரிபொருள் நிலையங்களில் வரிசையாக நின்ற நிலையில் எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றனர்.
எரிபொருள் கையிருப்பு
இதன் காரணமாக, அரசாங்கத்தினால் தொடர்ந்து, எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என வலியுறுத்தி வரப்படும் அதேவேளை, சட்டவிரோதமாக பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்றைய தினம், நாடாளுமன்றத்திற்கு சமுகமளித்த ஜனாதிபதி, டீசல் - 33 நாட்களுக்கும் பெட்ரோல் - 27 நாட்களுக்கும் விமான எரிபொருள் - 49 நாட்களுக்கும் மசகு எண்ணெய் - 44 நாட்களுக்கும் கையிருப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மக்கள் இது தொடர்பில் தொடர்ந்து பதற்றம் கொள்ள தேவையில்லை எனவும் எரிபொருளை கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam