இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கிணங்க செயற்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு - குற்றஞ்சாட்டும் தேரர்
விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவின்(India) நிகழ்ச்சி நிரலுக்கிணங்கவே நாட்டை பிளவுப்படுத்த போரிட்டது என்றும் இந்தியாவின் அந்த திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் பேராசிரியர் இந்துராகாரே தம்மரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
கொக்காவில் சம்பவத்தின் 35ஆவது ஆண்டு நினைவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தியா இலங்கை
தொடர்ந்து பேசிய தேரர்,
இந்தியாவிடம் நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறினால் இந்தியா இலங்கைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடும்.
அதேபோல் இந்தியா ஒப்பந்தத்தை மீறினால் எமக்கு ஒன்றும் செய்ய முடியாது.அயல் நாடுகள் எமக்குச் சண்டித்தனம் காட்ட முடியாது.
மோடி வரி
அவர்கள் உதவி செய்கிறார்கள் என்றால் நாமும் ஏதாவது செய்கிறோம்.அயல் நாடுகள் எமது உறவினர்களா? என்ற கேள்விக் கணையில் பிக்கு இந்தியாவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கௌதம புத்தரும் இந்தியாவைச் சேர்ந்தவரே.நாம் அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பௌத்த தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றார். அவற்றுக்கு நாம் மதிப்பளிக்கிறோம்.
ட்ரம்ப் வரிபோல் மோடி வரியும் வரலாம் என்றார்.

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 17 மணி நேரம் முன்

இஸ்ரேலை விட்டு வெளியேறும் யூதர்கள்.. வெளியே கூறமுடியாத இஸ்ரேலின் மிகப் பெரிய இராணுவ இழப்பு News Lankasri

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
