இலங்கையில் இந்தியா மேற்கொண்ட மறுமலர்ச்சிக்கு நன்றி தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன்

Sri Lankan Tamils Trincomalee Suresh Premachandran Sri Lanka India
By Theepan Dec 16, 2022 11:08 PM GMT
Report

அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சு.ஜெயசங்கர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மரபுரிமைகளை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அதற்கென்றே வெளிவிவகார அமைச்சில் ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் காசியில் நடைபெற்ற பாரதியாரின் பிறந்த தின வைபவத்தில் கலந்துகொண்டு பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பன்னிரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த மன்னார் திருக்கேஸ்வர ஆலயத்தை இந்தியப் பிரதமர் மோடி நேரில் சென்று வழிபட்டதன் பின்னர் அவ்வாலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மறுமலர்ச்சி ஏற்பட்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி

அவரது உரையை வரவேற்றும் அவருக்கு நன்றி தெரிவித்தும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்  ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இந்தியா மேற்கொண்ட மறுமலர்ச்சிக்கு நன்றி தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் | India S Renaissance In Sri Lanka Thanks

அந்த அறிக்கையில்,இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர், கடந்த 13.12.2022 அன்று காசியில் நடந்த பாரதியார் பிறந்தநாள் விழாவில், மரபுரிமைகளைப் பாதுகாக்கும் கடமைகளை இந்தியாவில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் இந்தியா செயற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் பன்னிரண்டு ஆண்டுகாலமாகப் பூட்டியிருந்த இலங்கையின் பாடல்பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தையும் தாங்கள் மீளக் கட்டியெழுப்பி புனர்நிர்மாணம் செய்திருப்பதாகவும் அதன் மூலம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலநூறு கோடி ரூபாய்களை செலவு செய்து ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கேதீஸ்வரம் சிவாலயத்தை மீட்டெடுத்து புனர் நிர்மாணம் செய்தமையை தமிழ் மக்கள் சார்பாக வரவேற்பதுடன் எமது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 தமிழ் மக்களின் மரபுரிமை

இலங்கை திருநாடு இராவணேஸ்வரன் ஆண்ட சிவபூமி என அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவைச் சுற்றி ஐந்து ஈஸ்வரங்கள் (சிவஸ்தலங்கள்) இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

அவ்வாறான ஒரு நாட்டில், சைவக் கோவில்கள் இடிக்கப்பட்டு, புதிய புதிய பௌத்த கோயில்களை உருவாக்குகிற ஒரு வேலையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருகின்றது.

இலங்கையில் இந்தியா மேற்கொண்ட மறுமலர்ச்சிக்கு நன்றி தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் | India S Renaissance In Sri Lanka Thanks

திருக்கேதீஸ்வரத்திற்கு இணையாக பாடல் பெற்றுத் திகழும் திருக்கோணேஸ்வரத்தில்கூட இந்த அரசாங்கம் புதிய கட்டடத் தொகுதியை அமைப்பதனூடாக அதன் புனிதத்தைக் கெடுத்து, அதனை ஒரு சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

இந்திய தூதுவர் நேரடியாக அங்கு சென்று, நிலைமையை நேரில் அறிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்போலவே முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களிலும் புராதன சைவக் கோயில்கள் இருந்த இடங்களில் அவை அகற்றப்பட்டு புத்த கோயில்களை உருவாக்கும் நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆகவே, இலங்கையில் தமிழ் மக்களின் மரபுரிமைகளைக் காப்பாற்றுவதாக இருந்தால், அதனைக் காப்பாறறுவதற்கான அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் கேதீஸ்வரம், கோணேஸ்வரம் ஆகியவற்றின் அடையாளங்களை எப்படி இலங்கை அரசு மாற்ற முற்படுகிறதோ அவ்வாறே ஏனைய இடங்களும் மாற்றப்படும்.

இலங்கையில் இந்தியா மேற்கொண்ட மறுமலர்ச்சிக்கு நன்றி தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் | India S Renaissance In Sri Lanka Thanks

இன்று இலங்கை அரசாங்கம் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பல்வேறு வழிகளின் ஊடாக தமிழ் மக்களுக்கும் சைவ மக்களுக்கும் உரித்தான மரபுரிமைகளை மறுதலித்து, அவற்றை சிங்கள பௌத்த மயமாக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றது. அந்த நடவடிக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பது தொன்மைமிக்க சைவ ஆலயங்களைப் பாதுகாப்பது போன்ற அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் தமிழ் மக்களுக்குக் கிடைப்பதன் ஊடாகவே நீண்ட நெடிய வரலாறுகளைக் கொண்ட அவர்களது மரபுரிமையும் பாதுகாக்கப்படும்.

ஆகவே இந்திய அரசாங்கம் இவற்றைக் கவனத்தில் எடுத்து தமிழ் மக்களின் மரபுரிமைகளை காலாதிகாலத்திற்குப் பாதுகாத்துக்கொள்ளும் அதிகாரங்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US