இந்தியாவின் டிஜிட்டல் அடையாள அட்டை விவகாரம் : உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
இந்திய அரசாங்கத்தின் மானியத்துடன் கூடிய தனித்துவமான டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவதை நிறுத்துவதற்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் லினா அமானி ரிஷார்ட் ஹமீத் தாக்கல் செய்துள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
இந்தியாவுடன் 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட இரகசிய திருத்தங்கள் இலங்கையின் டிஜிட்டல் அடையாளம் மற்றும் பயோமெட்ரிக் தரவு அமைப்புகள் மீது வெளிநாட்டு கட்டுப்பாட்டை அனுமதிக்கின்றது எனவும் இது தேசிய பாதுகாப்பு மற்றும் தரவு இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் பொதுமக்கள் அல்லது நாடாளுமன்ற ஆலோசனை இல்லாமல் செயற்படுத்தப்படுவதாகவும் இந்த திட்டம் குறித்த அமைச்சரவை முடிவுகள் பல அரசியலமைப்பு விதிகளை மீறுவதாக மனுதாரர் குறிப்பிடுகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா





அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri
