நிதிஷ் குமாரைக் கண்டதும் மோடி செய்த செயல் : வெளியாகியுள்ள காணொளி
இந்தியாவின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி (Narendra Modi) இன்றிரவு பதவியேற்க உள்ள நிலையில் நிதிஷ் குமார், நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோர் அமர்ந்து இருக்கும் வழியே நிதிஷ் குமார் வருவதும், நிதிஷ் வருவதை பார்த்ததும் நரேந்திர மோடி எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
எழுந்து நிற்கும் சம்பவங்கள்
இந்நிலையில், உலகின் சக்திவாய்ந்த தலைவராக இருக்கும் நரேந்திர மோடி, சர்வதேச தலைவர்களுடன் நட்புறவு கொண்டுள்ளதோடு பிரதமராக முதல் முறை பதவியேற்றதில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி உலக தலைவர்களின் மதிப்பை பெற்ற தலைவராக விளங்கி வருகிறார்.
பல தருணங்களில் நரேந்திர மோடியை பார்த்ததும் பல தலைவர்கள் எழுந்து நிற்கும் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இது தொடர்பாக வீடியோக்களும் வெளியாகி உள்ளன.
எல்லாரும் மோடியை பாத்து பயந்து எழுந்து நின்னு தானே பாத்திருக்க!?. இப்ப பாரு நா போறேன்.. மோடியே எழுந்து கும்முடு போடும் பாரு.....
— Qualified MP ⚪️ (@AalenOff) June 8, 2024
400 paar ~ அய்யா ??????.. pic.twitter.com/GVrsPVGfxb
இந்நிலையில் குறித்த காணொளியானது தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
எனினும், இம்முறை நரேந்திர மோடி பிரதமர் ஆக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் கட்சி ஆதரவு கட்டாயம் தேவை என்ற நிலை உருவானது. இதன்படி இருவரின் ஆதரவோடு நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆகவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |