மோடியின் பதவியேற்பில் பற்கேற்கவுள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர்

Narendra Modi India
By Rukshy Jun 09, 2024 09:10 AM GMT
Report

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை ஏற்று அவர் விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாஜக மூத்த தலைவர் பிரஹலாத் ஜோஷி மூலம் கார்கேவுக்கு நேற்றிரவு (09) அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளையில் நேற்று காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் அளித்த ஊடகப் பேட்டியில், “வெளிநாட்டுத் தலைவர்களுக்குத்தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸுக்கு, இண்டியா கூட்டணித் தலைவர்களுக்கு அழைப்பு வரவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

மோடி மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த ராகுல் காந்தி

மோடி மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த ராகுல் காந்தி

மேற்குவங்க முதல்வர்

இந்நிலையில் கார்கே பங்கேற்பை இன்று காங்கிரஸ் உறுதி செய்துள்ளது. இண்டியா கூட்டணித் தலைவர்களிடம் ஆலோசித்து இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மோடியின் பதவியேற்பில் பற்கேற்கவுள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் | Congress National President Modi S Inauguration

இதற்கிடையே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “எனக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. ஒருவேளை அழைப்பு வந்தாலும் கூட நான் விழாவுக்குச் செல்லப்போவதில்லை.

நான் ஏற்கெனவே மோடிக்கு வாக்களிக்காத மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டேன். ஆகையால் அரசமைப்புக்கு எதிரான சட்டவிரோதமான கட்சி ஆட்சி அமைப்பதற்கு வாழ்த்து தெரிவிக்க முடியாது” என்றார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மூத்த தலைவர்கள் பியுஷ் கோயல், நிதின் கட்கரி ஆகியோரும் இன்று பிரதமருடன் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக புதுடெல்லி சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில்

பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக புதுடெல்லி சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில்

மத்திய அமைச்சர்கள்

இவர்களுடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா, அர்ஜுன் மேக்வால், சிவ்ராஜ் சிங் சவுகான், எஸ்.ஜெய்சங்கர், மனோகர் கட்டார், கிரண் ரிஜிஜு, ஹர்ஷ் மல்ஹோத்ரா. ரக்‌ஷா கட்சே, பண்டி சஞ்சய், அஸ்வினி வைஷ்ணவ், ஜிதின் பிரசாத், ரவ்னீத் பிட்டு, சாந்தனு தாக்கூர், ஹர்தீப் புரி, கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடியின் பதவியேற்பில் பற்கேற்கவுள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் | Congress National President Modi S Inauguration

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ராம்நாத் தாக்கூர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவார் எனத் தெரிகிறது.  

இன்றைய பதவியேற்பு விழாவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம்மோகன் நாயுடு அமைச்சராக பதவியேற்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு நிகழ்கையில் அவரே நாட்டின் மிக இளம் வயது அமைச்சராக இருப்பார். ராம்மோகன் நாயுடு ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டவர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டவர்

நினைவிடங்களில் அஞ்சலி

இவர் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவர் எர்ரான் நாயுடுவின் மகனாவார். அரசியல் வாழ்வில் எர்ரான் நாயுடுவும் 39 வயதில் அமைச்சராகி சாதனை படைத்தார். அந்தப் பாரம்பரியத்தை அவரது மகன் இப்போது தொடர்கிறார். 

மோடியின் பதவியேற்பில் பற்கேற்கவுள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் | Congress National President Modi S Inauguration

முன்னதாக இதையொட்டி மோடி இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடம், முன்னாள் பிரதமர் வாஜ்பாயி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் தேசிய போர் நினைவுச் சின்னத்துக்கும் சென்றார். போர் நினைவிடத்தில் மோடியுடன் ராஜ்நாத் சிங்கும் இருந்தார்.

தொடர்ந்து பிரதமர் இல்லத்தில் எம்.பி.க்களுக்கு தேநீர் விருந்தும் அளிக்கப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் அனைவரும் அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோகோமோட்டிவ் தொடருந்து சாரதிகள் சங்கத்தின் பணிபுறக்கணிப்பு: பாதிக்கப்பட்ட தொடருந்து சேவை

லோகோமோட்டிவ் தொடருந்து சாரதிகள் சங்கத்தின் பணிபுறக்கணிப்பு: பாதிக்கப்பட்ட தொடருந்து சேவை

உயரமான இடத்திற்கு மாற்றப்படும் கொலன்னாவ நகரம்

உயரமான இடத்திற்கு மாற்றப்படும் கொலன்னாவ நகரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, நீர்கொழும்பு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

02 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிறுப்பிட்டி, அவுஸ்திரேலியா, Australia

03 Jun, 2013
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Chur, Switzerland, பேர்ண், Switzerland

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US