உயரமான இடத்திற்கு மாற்றப்படும் கொலன்னாவ நகரம்
கொலன்னாவ நகரத்தை அதே பகுதியில் உள்ள உயரமான இடத்திற்கு மாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
தற்போது தாழ்வான பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் புதிய நகரத் திட்டத்தின் கீழ் உயரமான நிலங்களில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதே பகுதியில் பொருத்தமான காணிகள் உள்ளதோடு, கொலன்னாவையின் புதிய நகரத் திட்டத்தின் பிரகாரம் அனுமதியற்ற நிர்மாணங்களைத் தடுக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பு
இத்திட்டத்தின்படி களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பு தயாரிக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் கொலன்னாவ நகரம் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததுடன் பொது இடங்களும் நீரில் மூழ்கியிருந்தன. இதனைத்தொடர்ந்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதியின் அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, பிரேம்நாத் சி.தொலவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 46 நிமிடங்கள் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
