மோடி மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த ராகுல் காந்தி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தவறான முதலீட்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், மோடி மீது நாடாளுமன்ற விசாரணைகளை நடாத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அரசாங்கம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத காரணத்தினால் இந்திய பங்குச்சந்தையில் (Indian Stock Market) பாரிய சரிவு ஏற்பட்டிருந்தது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தியப் பங்குச்சந்தை 3.4 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தது.
மோசமான சரிவு
இதனையடுத்து, அமித் ஷா (Amit Shah) உள்ளிட்ட மோடி அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சந்தையில் பாரிய வளர்ச்சி ஏற்படும் என தெரிவித்திருந்தனர்.
எனினும், அவர்கள் எதிர்பார்த்தவாறு தேர்தல் முடிவுகளோ பங்குச்சந்தை மாற்றமோ இடம்பெறாது மாறாக பங்குச்சந்தையில் பாரிய சரிவு ஏற்பட்டிருந்தது.
மேலும், இது கடந்த நான்கு வருடங்களில் ஏற்பட்ட மிக மோசமான சரிவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியூஷ் கோயல் கருத்து
இதனால், மோடி அரசாங்கம் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை தவறான வழிநடத்தலுக்கு ஆளாக்கியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய அழுத்தத்தில் ராகுல் காந்தி, போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
