டெல்லி தும்மினால் கொழும்புக்கு சளி பிடிக்கும்: சுட்டிக்காட்டப்பட்ட யதார்த்தங்கள்
டெல்லி (Delhi) தும்மினால், கொழும்புக்கு (Colombo) சளி பிடிக்கும் என்ற துணைக் கண்டத்தில் உள்ள இராஜதந்திரிகளுக்குத் தெரிந்த ஒரு பழைய நகைச்சுவையை இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தமது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இது நகைச்சுவை என்பதை காட்டிலும், இது, தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான மற்றும் வரலாற்று சமூக - அரசியல் தொடர்புகளை கோடிட்டு காட்டுகிறது.
அத்துடன், அதன் விளைவாக வரும் நீரோட்டங்கள் டெல்லியை விட கொழும்பில் அரசியல் முன்னேற்றங்களை காட்டுவதாக அந்த ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதவியேற்கும் நிகழ்வு
இந்த நாட்டில் ஒரு புதிய ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ தேர்ந்தெடுக்கப்பட்டால், அங்குள்ள அதிகாரங்களுக்கு பூஜை செய்ய டெல்லிக்கு அலைவது பெரும்பாலும் கட்டாயமாகிவிட்டது.
இந்நிலையில், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடியின் மூன்றாவது முறையாக பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கை ஜனாதிபதியை அழைத்துள்ளமையும், வழமையான ஒன்றாகும் என்று குறித்த ஆங்கில இதழ் கூறுகிறது.
இலங்கையின் நெருக்கடி
பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் கொழும்பை மீட்டெடுக்க விரைந்த இந்தியா, குறிப்பாக மோடி நிர்வாகம், இறக்குமதியை செலுத்த அவசர நிதியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த உதவிப் பொதியின் மூலம் நாட்டை முழுமையான பொருளாதார அராஜகத்திற்குள் தள்ளாமல் தடுத்தது என்பது நினைவுகூரத்தக்கது.
எனினும் கூட, அரசியல் விமர்சகர்கள் இந்த 'நட்பு உதவியை' குறைவான பாராட்டு வார்த்தைகளில் விபரித்துள்ளனர். ஒரே கல்லில் இரண்டு பறவைகளைக் கொன்றதன் மூலம் டெல்லி இலங்கையின் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டதாக அவர்கள் சுட்டிக்காட்டுவதாக ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், முன்னைய ஆட்சிக் காலத்தை காட்டிலும் தற்போதைய ஆட்சியில் பங்காளிகளை சார்ந்திருக்கும் மோடி, உள்நாட்டு விடயங்களில் அதிகம் கவனம் செலுத்தவேண்டியிருக்கும் என்றும் அந்த ஆசிரியர் தலையங்கம் கூறுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |