மோடியின் நிகழ்வுக்கு இந்திய கூட்டணிக்கு அழைப்பில்லை: ராகுலை எதிர்க்கட்சி தலைவராக்க தீர்மானம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்(Narendra Modi) பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வது தொடர்பில், இந்திய கூட்டணி விரைவில் முடிவெடுக்கும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று புதுடில்லியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் பின்னர் கருத்துரைத்த கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “விழாவில் பங்கேற்பது குறித்து இந்திய கூட்டமைப்பு கூட்டாக முடிவெடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கூட்டணி
எனினும் இன்னும் இந்திய கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுத்தலைவர்களுக்கு நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் உள்ளூர் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் அழைப்பு விடுக்கப்பட்டால், இந்திய கூட்டணி கூட்டாக முடிவெடுக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தியை மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய மக்களவைக்குள் நாட்டின் முக்கிய விடயங்கள் தொடர்பான பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு மிகவும் பொருத்தமானவர் ராகுல் காந்தியே என்று வேணுகோபால் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |