எட்டியாந்தோட்டையில் பேருந்து விபத்து : ஒருவர் பலி! நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் எட்டியாந்தோட்டை, ஹக்பெல்லாவக்க பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை (20) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே எட்டியாந்தோட்டை, ஹக்பெல்லாவக்க பகுதியில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து அங்கிருந்த வீடொன்றின் மீது விழுந்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
இதில் குறித்த வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்த மூன்று சிறுவர்கள் சிகிச்சைக்காக கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியர்கள் வைத்தியசாலையில் அனுமதி
உயிரிழந்தவர் தனது இரண்டு குழந்தைகளை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதற்காக சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த 40 வயதுடைய பெண் ஆவார்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இரண்டு இந்தியர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து யட்டியந்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam