இலங்கை மாஸ்டர்ஸை வீழ்த்திய இந்திய மாஸ்டர்ஸ்
இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025 இன் நேற்றைய ஆரம்ப ஆட்டத்தில், இந்திய மாஸ்டர்ஸ் அணி 4 ஓட்ட வித்தியாசத்தில் இலங்கை மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.
ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியன் மாஸ்டர்ஸ் அணி, ஆரம்பத்திலேயே சவாலான இலக்கை நிர்ணயித்தது.
இதன்படி 20 ஓவர்களில் அந்த அணி, 4 விக்கட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களை பெற்றது.
இதில், ரொஜர் பின்னி 68 ஓட்டங்களையும், யூசுப் பத்தான் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை மாஸ்டர்ஸ் அணி
இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மாஸ்டர்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது.
இதில், குமார் சங்கக்கார(kumar sangakkara) 51 ஓட்டங்களையும், ஜீவன் மெண்டிஸ் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்திய மாஸ்டர்ஸ் அணியின் பந்து வீச்சில் இர்பான் பத்தான் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
