இலங்கையின் 50 ஆயிரம் கோடி ரூபா கடனை மீள செலுத்த இந்தியா சலுகை: வெளிவரவுள்ள அறிவிப்பு

Government Of Sri Lanka Government Of India Economy of Sri Lanka
By Rakesh Oct 21, 2024 02:48 PM GMT
Report

இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு திருப்பி செலுத்த வேண்டிய சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபா கடனுக்கு முற்கூட்டியே சலுகைக் காலத்தை மேலதிகமாக அறிவிக்கவுள்ளதாக மேன்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இம்முறையும் இலங்கை கடனை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு விடும் நிலையைதவிர்க்கும் முகமாகவே அந்தக் கடனுக்கு முற்கூட்டியே சலுகைக் காலத்தை மேலதிகமாக அறிவித்து, இலங்கையை மீண்டும் ஒரு தடவை அகெளரவப்படாமல் காப்பாற்ற புதுடில்லி முன்வந்திருக்கின்றது என கூறப்படுகின்றது.

அதற்கமைய, குறித்த சலுகைக்கால அறிவிப்பு இந்தவாரத்தில் புதுடில்லியிலிருந்து வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு நாடுகளின் அரசியல் தலைவர்கள் சம்பந்தப்படாமல் நேரடியாக இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இந்த இணக்க நிலை எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிங்கள நடிகை தமிதா அபேரத்ன புதிய கட்சியில் இணைவு

சிங்கள நடிகை தமிதா அபேரத்ன புதிய கட்சியில் இணைவு

செலுத்த வேண்டிய நிலுவை 

இதன்படி, இந்தியாவுக்கு இலங்கை வரும் வாரத்தில் செலுத்த வேண்டிய சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபா நிலுவையைச் செலுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட இருக்கின்றது.

இலங்கையின் 50 ஆயிரம் கோடி ரூபா கடனை மீள செலுத்த இந்தியா சலுகை: வெளிவரவுள்ள அறிவிப்பு | India Let Offer To Sl 50K Cross Next Week

இதற்கான அறிவிப்பு புதுடில்லியில் இருந்து இந்த வாரம் கிடைக்கும் எனத் தெரியவருகின்றது. அரச உயர்மட்ட வட்டாரத்தில் இது தொடர்பாக பேசப்படாவிட்டாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரப் பேச்சுகள் மூலம், இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்திய - இலங்கை கடன் உடன்படிக்கையின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கிக்கு மொத்தக் கடனாக இலங்கை 2.6 பில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டும்.

இதில் சார்க் ஒப்பந்தம், ஏனைய கடன் வசதிகள் மூலம் செலுத்தப்படும் தொகையை விட 1.7 பில்லியன் டொலர்களை (50 ஆயிரம் கோடி இலங்கை ரூபாவை) இலங்கை வரும் வாரத்தில் இந்தியாவுக்குக் கடனாகச் செலுத்த வேண்டும். இந்தத் தொகையை இந்த வாரத்துக்குள் இலங்கை வழங்க வேண்டும்.

இன்றைய அரசியல் சூழலில், அரசோடு பேச்சு நடத்த முடியாத நிலையில், இந்தியாவும் இலங்கையும் இராஜதந்திர மட்டத்தில் பேச்சு நடத்தி, கால நீடிப்புக்கு இணக்கம் கண்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளரின் மரணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளரின் மரணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

உத்தியோகபூர்வ தகவல் 

எவ்வாறாயினும், புதிய பொருளாதார மீட்சி மற்றும் இலங்கையின் புதிய அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பித்து வரும் கலந்துரையாடல்களைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் செயல்முறைக்கு ஆதரவளிக்கும் வகையில் பரிமாற்ற ஏற்பாட்டை துரிதமாக நீடித்து உதவ இந்தியா முன்வந்துள்ளது.

இலங்கையின் 50 ஆயிரம் கோடி ரூபா கடனை மீள செலுத்த இந்தியா சலுகை: வெளிவரவுள்ள அறிவிப்பு | India Let Offer To Sl 50K Cross Next Week

இந்த நிலுவையில் உள்ள தொகையானது, ஆசிய கிளியரிங் யூனியன் மற்றும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான பொறிமுறையின் கீழ் சுமார் 2.6 பில்லியன் டொலர் மதிப்பிலான சிறப்பு பரிமாற்ற ஏற்பாடுகளின் கீழும் நிலவுகளை வழங்குவதற்கான உடன்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என உத்தியோகபூர்வ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. 

நிலுவையிலுள்ள கொடுப்பனவுகள் வழங்குவதற்கான முடிவை இந்தியத் தரப்பு உத்தியோகபூர்வமற்ற முறையில் இலங்கை அரசுக்குத் தெரிவித்துள்ளது எனவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் உரிய நேரத்தில் அனுப்பப்படும் எனவும் அந்த வட்டாரம் மேலும் தகவல் வழங்கியுள்ளது.

இந்தக்கால அவகாசம் எப்போது வழங்கப்படும் என்று கேட்டபோது, புதுடில்லியில் இருந்து வரவிருக்கும் உத்தியோகபூர்வ தகவல் தொடர்புகளில் அது அறியப்படும் என்றும் அந்த வட்டாரம் கூறியுள்ளது.

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் அடங்கலாக 18 பேரிடம் விசாரணை முன்னெடுப்பு

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் அடங்கலாக 18 பேரிடம் விசாரணை முன்னெடுப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US