மீண்டும் இலங்கைக்குள் நுழையவுள்ள இந்திய சீன கப்பல்கள்!
சீனாவில் இருந்து சேதனப்பசளைகளை ஏற்றிய முதல் கப்பல் எதிர்வரும் பெப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 8ஆயிரம் தொன் எடையைக்கொண்ட இந்த பசளைகள், ஆய்வுக்கூட பரிசோதனைகளுக்கு பின்னர் இலங்கைக்கு வரவுள்ளது.
மொத்தமாக சீன நிறுவனத்திடம் இருந்து 96ஆயிரம் மெற்றிக் தொன் சேதனப்பசளைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவை கட்டம் கட்டமாக இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளன.
இந்த பசளைகள் எதிர்வரும் பயிர்ச்செய்கை பருவத்தில் பயன்படுத்தப்படவுள்ளன.
ஏற்கனவே இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட சீன நிறுவனத்தின் சேதனப்பசளைகளில் பக்றீரியா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், அதனை ஏற்றி வந்த கப்பல், திரும்பிச்சென்றது.
எனினும் அந்த பசளைக்கான நாணயக்கடிதம் பெறப்பட்ட நிலையில் நீண்ட பிரச்சினைக்கு பின்னர் இலங்கையின் மக்கள் வங்கி, 6.9 மில்லியன் டொலர்களை நேற்று வெள்ளிக்கிழமை செலுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது
இதற்கிடையில் சுமார் 400,000 லீற்றர் திரவ பசளை இந்த மாத இறுதியில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இதனையடுத்து சுமார் 10 லட்சம் திரவ பசளையை, நாடு முழுவதும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு கொமர்ஷல் பேர்டிலைசர்ஸ் கம்பனியின் தலைவர் விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri