இந்தியாவின் இமாலய எண்ணிக்கையை தொட முடியாது துவண்டுபோன தென்னாபிரிக்கா
இந்திய அணியின் இமாலய எண்ணிக்கையை தொடமுடியாது துவண்டுபோன தென்னாபிரிக்க அணி சுற்றுலா இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான நான்காவதும் இறுதியுமான 20க்கு20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 135 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ஜொஹன்னார்ஸ்பேர்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 283 ஓட்டங்களை பெற்றது.
இதில், சஞ்சு சம்சன் ஆட்டமிழக்காது 56 பந்துகளில், 103 ஓட்டங்களையும், திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 120 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.அபிசேக் சர்மா 18 பந்துகளில் 36 ஓட்டங்களை பெற்றார்.
தலா இரண்டு விக்கட்டுக்கள்
இதனையடுத்து துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, 18.2 ஓவர்களில் 10 விக்கட்டுக்களையும் இழந்து 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதன் மூலம் போட்டியில் தோல்வியை தழுவியது.

இந்திய அணியின் பந்துவீச்சில், ஆர்ஸ்தீப் சிங் 3 விக்கட்டுக்களையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்கு போட்டிகளைக் கொண்ட 20க்கு 20 கிரிக்கட் தொடரில் இந்திய அணி 3க்கு 1 என்ற வெற்றியின் அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri