இலங்கை அணிக்கு ஆலோசக பயிற்சியாளராக செயற்படும் தென்னாபிரிக்க வீரர்
தென்னாபிரிக்க (South Africa ) கிரிக்கட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் நீல் மெக்கன்சி (Neil McKenzie ), குறுகிய காலத்திற்கு இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் ஆலோசகர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக, நேற்றிரவு தென்னாபிரிக்காவிற்கு புறப்பட்ட இலங்கை வீரர்கள் குழுவுடன் அவர் இணைந்து பணியாற்றவுள்ளார்.
5,000 சர்வதேச ஓட்டங்கள்
தென்னாபிரிக்க கள நிலைமைகள் பற்றிய முக்கியமான, ஆழமான நுண்ணறிவுகளை மெக்கென்சி இலங்கை வீரர்களுக்கு வழங்குவார் என்று இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி டி சில்வா கூறியுள்ளார்.
நீல் மெக்கன்சி, தென்னாப்பிரிக்காவுக்காக 5,000 சர்வதேச ஓட்டங்களை அனைத்து வடிவங்களிலும் எடுத்த முன்னாள் தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரராவார்.
அவர் 2024 நவம்பர் 13 முதல் 21 வரை இலங்கை வீரர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.
இலங்கை அணியின் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர், 2023 - 2025க்கான ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்சிப் சுழற்சியின் ஒரு பகுதியாகும், எனவே ஐசிசி செம்பியன்சிப் இறுதி ஆட்டத்துக்கான இந்த தொடர் இலங்கையை பொறுத்தவரையில் முக்கியமானதாக அமைந்துள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |