இந்திய அணியை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த தென்னாபிரிக்கா
சுற்றுலா இந்திய (India ) அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் (South Africa ) இடையில் நேற்று (10) சென் ஜோர்ஜியா பார்க்கில் இடம்பெற்ற 2வது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்க அணி, 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்கள் இழப்புக்கு 126 ஓட்டங்களை பெற்றது.
இதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சம்சன் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்தார்.
7 விக்கட்டுக்கள் இழப்பு
ஹர்திக் பாண்டியா மாத்திரமே 39 ஓட்டங்களை பெற்றார். எனினும் அதற்காக அவர் 45 பந்துகளை எதிர்கொண்டார்.

இந்தநிலையில் பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி,19 ஓவர்களில் 7 விக்கட்டுக்கள் இழப்புக்கு 128 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.
ட்ரைஸ்டன் ஸ்டீப்ஸ் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதன்படி இரண்டு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகளை கொண்ட 20க்கு20 தொடரில் இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற ரீதியில் சமநிலை வெற்றியை பெற்றுள்ளன.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri