அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான் அணி
அவுஸ்திரேலியாவுக்கு (Australia ) எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் (Pakistan ) அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ள முகமது ரிஸ்வான் (Mohammed Rizwan ) தலைமையிலான பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.
முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானும் வென்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி, பேர்த்தில் நேற்று (10) நடைபெற்றது.
22 ஆண்டுகளுக்குப் பின்
போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதனையடுத்து துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி, 26.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து 143 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.

இதன்படி அவுஸ்திரேலிய மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி, ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது.
அதேநேரம் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய அணி இழந்துள்ளது.
கடைசியாக 2019ல் இந்தியாவிடம், அவுஸ்திரேலியா ஒருநாள் தொடரை இழந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan