நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்
நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் மட்டக்களப்பிலும் சுதந்திர தின நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா தலைமையில் நடைபெற்றுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
போரதீவுப்பற்று
மேலும், மட்டக்களப்பின் போரதீவுப்பற்று பிரதேச சபையிலும் சுதந்திர தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செய்தி - ராஜன்
யாழ்ப்பாணம்
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் மாணவர்களின் பேண்ட் வாத்தியம் மற்றும் அணிவகுப்பு என்பன நடைபெற்றது.
மேலும். நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் 52 ஆவது படைப்பிரிவின் உப கட்டளை தளபதி, பொலிஸார், மத குருமார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - கஜிந்தன்
கிளிநொச்சி
சுதந்திர தின நிகழ்வுகள் கிளிநொச்சியிலும் இடம்பெற்றது.
காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது. தேசிய கொடி எற்றப்பட்டு கீதம் இசைக்கப்பட்டதுடன் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றது.
செய்தி - எரிமலை
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (04) காலை 8.30 மணியளவில் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமா மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தேசிய கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைத்ததை தொடர்ந்து தமிழ் மற்றும் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
மேலும். நிகழ்வில் சமூக பாதுகாப்பு நன்கொடை நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன், விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக இருசக்கர உழவியந்திரங்கள் 4 வழங்கி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மரநடுகையை ஊக்குவிக்கும் முகமாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் கலந்து கொண்ட அதிதிகளால் மர நடுகை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
செய்தி - ஷான்
வவுனியா
சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் குலசிங்கம் திலீபன் கலந்து கொண்டிருந்தார்.
செய்தி - திலீபன்
அம்பாறை
நாட்டின் 76வது சுதந்திர விழா நிகழ்வு அம்பாறை நகரத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் தலைமையில் நடைபெற்றது.இதன்போது பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதத்தலைவர்களின் ஆசியுரைகள் நடைபெற்று அரசாங்க அதிபரின் பிரதான உரையையடுத்து இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 76வது சுதந்திர தின விழா சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இன்று(4) நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
76 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது தேசிய கொடியை குவாஷி நீதிமன்ற நீதிபதி அஹமட் லெப்பை ஆதம்பாவா ஏற்றி வைத்தார்.
இந்நாட்டின் சுபீட்சத்திற்காகவும் சமாதானத்திற்காகவும் இந்நாட்டு மக்கள் ஐக்கியப்பட்டு வாழவேண்டும் என்பதற்காகவும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
செய்தி - ப்பாறுக் சிஹான்
திருகோணமலை
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வானது
இன்று (04) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த
ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த முப்படை வீரர்களை நினைவு கூரும் வகையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகத்திலும் குறித்த சுதந்திர தின நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ஜெய கௌரி ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றது."புதிய நாட்டை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப் பொருளின் கீழ் இடம் பெறும் இச் சுதந்திர தின வைபவத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது
செய்தி - ஹஸ்பர்
மன்னார்
மன்னார் மாவட்டத்திலும் சுதந்திர தின நிகழ்வுகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
மன்னார் பொலிஸார்,பாடசாலை மாணவர்களின் வாத்திய குழுவினர் மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள் இணைந்து அணிவகுப்பு மரியாதையை முன்னெடுத்தனர்.
செய்தி - ஆஷிக்
வவுனியா
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பயன் தரு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான் புதுக்குளத்தில் இடம்பெற்றது.
இதன்போது, அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
செய்தி - திலீபன்
மட்டக்களப்பு
இலங்கையின் 76 வது தேசிய சுதந்திர தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. இன்றைய தினம் மட்டக்களப்பில் சாரணிய மாணவர்களினால் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி சாரண மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
செய்தி - குமார்
சாய்ந்தமருது
76 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு 2024.02.04 திகதி அன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது தேசிய கொடியை குவாஷி நீதிமன்ற நீதிபதி அஹமட் லெப்பை ஆதம்பாவா ஏற்றி வைத்தார்.
இந்நாட்டின் சுபீட்சத்திற்காகவும் சமாதானத்திற்காகவும் இந்நாட்டு மக்கள் ஐக்கியப்பட்டு வாழவேண்டும் என்பதற்காகவும் தேசிய கீதம் இசைக்கப்பட்டடன. இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 76 வது சுதந்திர தின நிகழ்வு.
மண்முனை தென் எருவில்பற்று
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதனை
தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு மும்மத
அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன் தேச விடுதலைக்காக உயிர்நீத்தோருக்காக இரு நிமிட
மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
செய்தி - ருசாத்
புத்தளம் - கொழும்பு முகத்திடல்
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமான நிகழ்வுகள் இன்று புத்தளம் - கொழும்பு முகத்திடலில் மிகவும் விமர்சையாக நடைப்பெற்றுள்ளது.
மேலும், குறித்த நிகழ்வுகள், புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ் பி ஹேரத் தலைமையில் இடம்பெற்றதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிந்தக்க அமல் மாயாதுன்ன மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |