இன்று முதல் கடுமையாகும் நடைமுறை
அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகளில் இருக்கைப்பட்டி அணியாதவர்களுக்கு எதிராக இன்று முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.
இருக்கைப்பட்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த 3 மாத கால அவகாசம் கடந்த டிசம்பர் 24ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில்
இதன்படி வாகன சாரதி மற்றும் பயணிக்கும் அனைவரும் இருக்கைப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாகன சாரதி மற்றும் முன் இருக்கையில் அமர்ந்து செல்லும் பயணி ஆகிய இருவருக்கும் இச்சட்டம் பொருந்தும்.
வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் இந்த விதிமுறையை மிகவும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
விருந்தில் ஏற்பட்ட சண்டை.. வெளிவந்த உண்மையால் கோபத்தில் பாண்டியன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam