கொழும்பில் தம்பதியினரை மிரட்டி தங்கநகை மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளை
அதுருகிரிய, போரலுகொட சாலையில் உள்ள வீடொன்றில் ஐந்து பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் தம்பதியினரை மிரட்டி பணம், தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாடி வீட்டிற்குள் கருப்பு நிற உடையணிந்து, கருப்பு நிற துணியால் முகத்தை மூடிய ஐந்து பேர் 4 மில்லியன் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட தங்கப்பொருட்களில் 13 பவுண் எடையுள்ள எட்டு தங்க வளையல்கள், ஒரு தங்க மோதிரம் மற்றும் வைரம் பதித்த தங்க மோதிரம் ஆகியவை அடங்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் மேல் தளத்தில் உள்ள படுக்கையறைக்குள் நேற்றிரவு 10.30 மணியளவில் நுழைந்த கொள்ளையர்கள், தூங்கிக்கொண்டிருந்த தம்பதியினரை மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் மொபைல் போனையும் திருடிச்சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து அதுருகிரிய பொலிஸ் பொறுப்பதிகாரி பெர்னாண்டோ உள்ளிட்ட குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
அதிகாலையில் விபத்தில் சிக்கிய கொழும்பு சென்ற பேருந்து! சாரதியின் சாதுரியத்தால் காப்பாற்றப்பட்ட உயிர்கள்