அதிகாலையில் விபத்தில் சிக்கிய கொழும்பு சென்ற பேருந்து! சாரதியின் சாதுரியத்தால் காப்பாற்றப்பட்ட உயிர்கள்
தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பகுதியில் இன்று (26) அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சாரதி மற்றும் நடத்துனரின் செயற்பாடு
பேருந்து வளைவில் செல்ல முயன்றபோது, சாரதி பேருந்தை கட்டுப்படுத்த இரண்டாவது "கியர்" (Gear) மாற்றியதாகவும், அந்த நேரத்தில், பேருந்தின் தடை ( பிரேக்) செயலிழந்ததை உடனடியாக உணர்ந்து பேருந்தை மண் மேட்டில் மோத வைத்து பேருந்தினை நிறுத்தி பயணிகளுக்கு ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்து பயணிகளை காப்பாற்றியுள்ளார்.

இந்த விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 80 பயணிகள் இருந்துள்ளதுடன்,மூன்று பிள்ளைகளின் தந்தையான மகேஷ் சுதர்சன் (49) என்பவர் உடனடியாக செயற்பட்டு பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
இதனையடுத்து பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் பயணிகளை வேறு பேருந்திற்கு மாற்றி பாதுகாப்பாக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விபத்து குறித்து கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல், புகைப்படங்கள் - திவா







ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan