இலங்கையை தோற்கடித்த இந்திய மகளிர் அணி
19 வயதுக்குட்பட்ட மகளிர் 20க்கு20 உலகக் கிண்ணப்போட்டிகளின் இன்றைய ஆட்டம் ஒன்றில், இலங்கை அணியை 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மலேசியா - கோலாலம்பூரில் உள்ள பாயுமாஸ் ஓவலில் இன்று இந்தப்போட்டி இடம்பெற்றது.
சுப்பர் 6 சுற்று
ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 118 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. கோங்கடி த்ரிசா, 49 ஓட்டங்களை பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இலங்கை அணியின் சார்பில் மெத்சரா, லிமான்சா திலகரத்ன மற்றும் தலகுனே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதனையடுத்து, துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 58 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் பருணிகா தனது 4 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
