யாழ்.உடுவில் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
யாழ்ப்பாணம் (Jaffna) -உடுவில் பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று மானிப்பாய் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (23) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி G.J.குணதிலக தலைமையிலன விசேட பிரிவினரால் இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
குறித்த முற்றுகையின் போது 330 லீற்றர் கோடா, 15 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பதார்த்தங்கள் , தயாரிக்க பயன்படுத்தும் சில உபகரணங்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் 39 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கோடா, கடிப்பு மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் என்பவற்றை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
