சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது
மகாவலி ஆற்றிற்கு நீர்வழங்கும் ஹட்டன் ஓயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (22) ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹட்டன் ஓயாவில் இயந்திரங்களைப் பயன்படுத்தி ஒரு குழு மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடுவதாக ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு சோதனை நடாத்தி சந்தேக நபர்களை கைது செய்ததோடு, மாணிக்ககல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், 30-50 வயதுக்குட்பட்டவர்கள் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |