மின்சாரத்தில் ஓடுகின்ற சைக்கிள் பாவனை அதிகரிப்பு(Video)
நாடளாவிய ரீதியில் எரிபொருள் பிரச்சினை இன்றைய சூழலில் காணப்படுவதனால் பொதுமக்கள் மாற்று யுக்தியுடைய பல உபகரணங்களை அன்றாட செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
அம்பாறை - கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு மின் சேமிப்பு சைக்கிளை தற்போது பொதுமக்கள் பரவலாக பாவிக்ககின்றது.
சைக்கிளின் மதிப்பு
சுமார் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் குறித்த சைக்கிள் இலங்கை நாணய மதிப்பில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாக உள்ளதாக பாவனையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
8 மணித்தியாலங்கள் மின்சாரத்தின் உதவியுடன் சார்ஜ் செய்யப்படும் இச்சைக்கிள் மின்சார மின்கலத்தின் சக்தியுடன் விரைவாக பயணத்தை ஆரம்பிக்கின்றது.
எரிபொருள் இல்லாமல் இலகுவாக ஒரு மனிதன் இச்சைக்கிளை பயன்படுத்தி தத்தமது வேலைகளை விரைவாக பூர்த்தி செய்கின்றதுடன் இரவில் பயணம் செய்வதற்குரிய சக்தி வாய்ந்த மின்குழிழ் இச்சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் வீதியில் பயணிக்கின்ற போது எதிரே வருகின்ற வாகனங்களுக்கு சமிஞ்சை வழங்கக்கூடிய வசதியையும் இச்சைக்கிள் கொண்டுள்ளது.
ஒரே தடவையில் சுமார் 100 கிலோமீற்றர் தூரத்திற்கு சென்று இலக்கினை அடைந்து திரும்ப முடிகின்றதுடன் இதில் அமர்ந்து செல்ல பிரத்தியேக தயாரிப்பு ஆசனம் பொருத்துவதற்குரிய ஏற்பாடும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயன்படுத்த காரணம்
பெட்ரோல் இல்லாத இக்கால பகுதியில் பொதுமக்கள் இவ்வாறான சைக்கிள் வண்டிகளை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர்.
அலுவலக பேருந்து சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 20 மணி நேரம் முன்

உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கத் துவங்கிவிட்டது: பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள விவரம் News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் குழந்தை லட்சுமியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ Cineulagam

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! சிரித்து கொண்டே மாணவ, மாணவிகள் வாழ்வை நாசமாக்கிய லட்சாதிபதி கைது News Lankasri
