வீடுகளில் எரிபொருள் பதுக்கல்:கிளிநொச்சியில் ஒருவர் கைது
கிளிநொச்சி நகரப் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி - கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் வீடுகளுக்குள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 லீட்டர் டீசல், 950 லீட்டர் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன.
எரிபொருள் பதுக்கல்
இதனை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில்
பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட விசேட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன.
எரிபொருள் தட்டுபாடு
சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.