அலுவலக பேருந்து சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு
எதிர்வரும் இரண்டு வாரங்களில் அலுவலக பேருந்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பல்வேறு அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
குறைந்த விலையில் அலுவலக சேவை

தனியார் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருள் வழங்கினால், தற்போதைய பேருந்து கட்டணத்தை விட குறைந்த விலையில் அலுவலக சேவையை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்காம டிப்போவினால் எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் அதற்கான பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டிய கெமுனு விஜேரத்ன, மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாதது வேதனையான நிலை எனவும் குறிப்பிட்டார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri