மறைமுக வரியின் தாக்கம்: அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்
கடந்த 2023 ஆம் ஆண்டை விட இந்த வருடத்தின் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லாததால், சிங்கள புத்தாண்டு காலத்திலும் பொதுமக்கள் அதிக விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் எதிர்பார்க்கும் வருவாய் இலக்குகளின்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கையினால் இதுவரையில் ஒருவர் ஒரு மாதத்தில் செலுத்திய மறைமுக வரியான 6330.00 ரூபா 3684 ரூபாயிலிருந்து 10014.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மறைமுக வரி
இதன்படி, நாட்டில் வசிக்கும் ஒருவர் மாதாந்தம் 14737 ரூபா மறைமுக வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்த விடயங்களின் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகளை அரசாங்கம் மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும் எனவும், இதன் காரணமாக எதிர்காலத்தில் மக்கள் தமது வாழ்க்கைச் செலவுகளை ஈடுசெய்வதில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகலாம் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வரி வருமானம்
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை செயற்படுத்தி உள்ளூர் பொருளாதாரத்தை விரிவுபடுத்தி பொருளாதாரத்தை உருவாக்குதல் நாட்டின் தற்போதைய தேவை என்றும் கூறியுள்ளார்.
இதன் மூலம் நாட்டுக்குத் தேவையான பொருட்கள் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
