தட்டச்சு இயந்திரத்தின் விலை மூன்று இலட்சம் ரூபாவாக உயர்வு
பார்வையற்றோர் சமூகம் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரத்தின் விலை ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்தில் இருந்து மூன்று இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவரும் பார்வையற்றோருக்கான தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான பிரசன்ன விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
தட்டச்சு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களின் விலை இரண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக பார்வையற்ற சிறுவர்களின் கல்வி கூட பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டியில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சாதாரணக் குழந்தைகள் பயன்படுத்தும் புத்தகம், பேனா போன்ற பார்வையற்ற குழந்தைகள் கல்விக்காகப் பயன்படுத்தும் பலகையின் விலை சுமார் 300 ரூபாவாக இருந்த நிலையில் தற்போது 3000 ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும். எனினும் அவை வாங்குவதற்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
விசேட தொழில்நுட்ப முறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒலிப்புத்தகங்களைக் கேட்கும் தொழில்நுட்ப சாதனத்தின் விலை 22,000 ரூபாயில் இருந்து 60,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்
டொலரின் பெறுமதி அதிகரிப்புடன் இந்த உபகரணங்களை அரசாங்கம் அத்தியாவசியமற்ற பொருட்களாக அறிவித்தமையினால் இந்த உபகரணங்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பார்வையற்றோர் மிகவும் குறைந்த வசதிகளில் மிகவும் சிரமப்பட்டு வாழும் ஒரு பிரிவினர்.
இவர்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் அத்தியாவசியமற்றவை என அரசால் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அந்த உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை. இறக்குமதி செய்தாலும் வாங்க முடியாத அளவுக்கு அதிக விலைக்கு விற்க வேண்டியுள்ளது.
இது மிகவும் அநியாயம். இப்படியே தொடர்ந்தால், பார்வைக் குறைபாடுள்ள குழந்தை எதையும் கற்றுக்கொள்ள முடியாமல் போகும். இந்த நிலையில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்தார்.
அமைச்சரவையை நியமிக்கும் போது, மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளக்கூடிய, உணர்வு பூர்வமான அமைச்சரை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 23 மணி நேரம் முன்

மெஸ்சி, எம்பாப்பேவை மீறி கடைசி நொடிகளில் கோல் அடித்த வீரர்! வெற்றியை இழந்ததால் அதிர்ச்சியில் உறைந்த PSG News Lankasri

உங்களை இழக்கப் போகிறேன் தோழியே! மறைந்த 101 வயது கனேடிய மேயருக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்த ட்ரூடோ News Lankasri
