மீண்டும் திடீரென அதிகரிக்கப்பட்ட எரிபொருளின் விலை! புதிய விலைப் பட்டியல் இதோ
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாவாலும், ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.
177 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் புதிய விலை 184 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 121 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் டீசலின் புதிய விலையாக 124 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சிக்கியுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வழிகள் இன்று சமகால அரசாங்கம் திணறி வருகிறது.
இந்நிலையில் நாளாந்தம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த அரசினால் முடிவில்லை.
இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது பெற்றோலின் விலைகள் மிகவும் குறைவான மட்டத்திலேயே பேணப்பட்டு வந்தன.
அப்போதைய எதிர்க்கட்சியான இருந்த சமகால அரசாங்க தரப்பினர், எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்திற்கு சைக்கிள் மூலம் சென்றிருந்தனர்.
இதில் சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அமைச்சர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.