ஜேர்மன் நாட்டின் மிசறியோ நிறுவன இலங்கைக்கான பொறுப்பதிகாரி யாழ். ஆயருடன் சந்திப்பு
ஜேர்மன் நாட்டின் மிசறியோ நிறுவன இலங்கைக்கான பொறுப்பதிகாரி கொரினா பிறோக்மன் கரித்தாஸ் கியூடெக் நிறுவன செயற்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் வைத்து யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஆயருடனான சந்திப்பு
இதேவேளை சல்வற்றோறியன் சபையின் மாகாண முதல்வி அருட்சகோதரி சிறோமா ஆயர் இல்லத்திற்கு வருகைதந்து ஆயருடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

குறித்த சந்திப்பில் மிசறியோ நிறுவன ஆலோசகர் உல்றைக் வைன்ஸ்பாஜ்ச், கரித்தாஸ் கியூடெக் தேசிய இயக்குநர் அருட்தந்தை லூக் நெல்சன் பெரேரா, சமாதான நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் அருட்சகோதரி தீபா பெர்னாண்டோ, தேசிய நிறவன இணைப்பாளர் சோபன்ஜானி, யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை யூயின் பிரான்சிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri