கெஹலியவுக்கு தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மேலும் மருத்துவ கண்காணிப்பு அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதன்படி, கெஹெலிய தொடர்ந்தும் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி. பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கெஹெலியவின் உடல்நிலை
நீதிமன்ற உத்தரவுக்கமைய இது தொடர்பான மருத்துவ அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மனித இம்யூனோகுளோபுலின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் பெப்ரவரி 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
எனினும் மருத்துவ காரணங்களுக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இந்தநிலையில் கெஹெலிய உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை என்று சிறைச்சாலைகள் பேச்சாளர் காமினி.பி. திஸாநாயக்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
