மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க டில்வின் சில்வா யார்..! சர்வாதிகாரச் செயலை கண்டித்த இம்ரான் எம்.பி

Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Imran Maharoof Election
By H. A. Roshan May 26, 2026 05:18 AM GMT
Report

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, நாட்டின் மாகாண சபைத்தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெறாது என தன்னிச்சையாக அறிவித்திருப்பது மக்களின் இறையாண்மையை அப்பட்டமாக உதைத்துத் தள்ளும் ஒரு சர்வாதிகாரச் செயலாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

காரில் துப்பாக்கி தோட்டாக்கள் கடத்தி மூவர் கைது..! தீவிரப்படுத்தப்படும் விசாரணை

காரில் துப்பாக்கி தோட்டாக்கள் கடத்தி மூவர் கைது..! தீவிரப்படுத்தப்படும் விசாரணை

மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்கும் அரசு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபை முறைமையை ஆரம்பம் முதல் எதிர்த்துவந்த மக்கள் விடுதலை முன்னணி, இவ்வாறான இழுத்தடிப்புகள் மூலம் அதனை இல்லாது செய்ய முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைக்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு இந்த நாட்டின் தேர்தல் குறித்து தீர்மானிப்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கேட்க விரும்புகின்றேன். மாகாணசபைத் தேர்தலை நடத்த விரும்பாத இந்த அரசாங்கம் டில்வின் சில்வா மூலம் அதனை வெளிப்படுத்தியுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க டில்வின் சில்வா யார்..! சர்வாதிகாரச் செயலை கண்டித்த இம்ரான் எம்.பி | Imran Mp Regarding Provincial Council Elections

சிறுபான்மை மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியும், இந்த அரசாங்கமும் அந்த மக்களின் மாகாண சபை அபிலாசைகளை குழி தோண்டிப் புதைக்கும் நடவடிக்கை எடுப்பது கவலையைத் தருகின்றது. இலங்கை அரசியலமைப்பின் படி, தேர்தலை நடத்துவது மற்றும் அது தொடர்பான இறுதித்தீர்மானங்களை எடுக்கும் முழுமையான அதிகாரம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கே உரியதாகும்.

அதேபோன்று, பொது நிதியை ஒதுக்குவதும், அதனை மாற்றுவதும் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் நிதி அமைச்சருக்குரியது. இந்த சட்டபூர்வமான நடைமுறைகளில் தலையீடு செய்யும் அதிகாரம் டில்வின் சில்வாவுக்கு எப்படி வந்தது.

நாடாளுமன்றத்தையோ, தேர்தல் ஆணைக்குழுவையோ மதிக்காமல், மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகமான பெலவத்தையில் எடுக்கப்படும் முடிவுகளை நாட்டின் சட்டமாக திணிக்க முற்படுவது அப்பட்டமான ஜனநாயக மீறலாகும்.

மாகாண சபை தேர்தல் ஒத்திவைப்பு

மிக முக்கியமாக, மாகாண சபை முறைமை இந்த நாட்டு சிறுபான்மை மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான ஒரு அரசியல் தீர்வாக, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் ஊடாகக் கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். அதிகாரப் பகிர்வு மற்றும் சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த மாகாண சபை கட்டமைப்பை, தேர்தல் நடத்தாமல் தொடர்ந்தும் முடக்கி வைக்க முற்படுவது சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க டில்வின் சில்வா யார்..! சர்வாதிகாரச் செயலை கண்டித்த இம்ரான் எம்.பி | Imran Mp Regarding Provincial Council Elections

ஆரம்பம் முதலே மாகாண சபை முறைமையை எதிர்த்துவந்த ஜே.வி.பி, இன்று அதனை அவர்களது தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு தனி நபரின் அறிக்கை மூலம் புதைக்கப் பார்க்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

சிறுபான்மையினரின் அரசியல் அபிலாசையான மாகாண சபைத்தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைப்பதும், அதனை ஒரு கட்சிச்செயலாளர் ஊடகங்களுக்கு அறிவிப்பதும் 'மாற்றத்தை' நோக்கி வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயலாகும்.

சிறுபான்மை மக்களின் தேவைகளை  தீர்த்து வைப்போம் என்று வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இப்போது தம்மை ஏமாற்றுகிறது என்பதை மக்கள் புரிய ஆரம்பித்துள்ளார்கள் என்றார்.  

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் பல மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் பல மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு

2009 இறுதி யுத்தம் தொடர்பில் கொழும்பில் ஆபத்தான முடிவு

2009 இறுதி யுத்தம் தொடர்பில் கொழும்பில் ஆபத்தான முடிவு



7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US