இலங்கையின் ஏற்றுமதி வருமானம் பல மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு
2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கான மொத்த ஏற்றுமதி வருமானம் 5,784.38 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் வர்த்தகப் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய மொத்த ஏற்றுமதி வருமானம், 1,380.93 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்ற விவகாரம்! சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை
இது 2025 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6 சதவீத ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள தற்காலிகத் தரவுகள் மற்றும் ரத்தினக்கல், ஆபரணங்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 2026 ஏப்ரலில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி 9.87 சதவீதத்தால் அதிகரித்து 1,063.77 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

அதேவேளையில், 2026 ஏப்ரல் மாதத்தில் சேவைத் துறை ஏற்றுமதி மூலம் 317.16 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டின் 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கான மொத்த ஏற்றுமதி வருமானம் 5இ784.38 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4.3 சதவீத வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது.
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி உயிர் மாய்ப்பு - செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!