இலங்கையர்களை தலைசுற்ற வைக்கும் எலுமிச்சையின் விலை!
இலங்கையில் மரக்கறிகளின் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோர் கடுமையான நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, மலைநாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளின் விலையில் கடும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகரித்துள்ள விலை
கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலையினால், பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் சந்தைக்கு வரும் மரக்கறிகளின் வரத்து குறைவடைந்தமை இந்த விலை உயர்விற்கு காரணம் என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, எலுமிச்சை ஒரு கிலோ கிராமின் விலை 2,000 ரூபாவிற்கும் மேல் அதிகரித்துள்ளது.

மேலும், குடைமிளகாய் ஒரு கிலோ கிராம் 950 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன், கத்தரிக்காய் ஒரு கிலோ கிராம் 500 ரூபாவிற்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 800 ரூபாவிற்கும், போஞ்சி ஒரு கிலோ கிராம் 450 ரூபாவிற்கும், கரட் ஒரு கிலோ கிராம் 600 முதல் 700 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, பூசணிக்காய் மற்றும் வாழைக்காய் ஒரு கிலோ கிராம் 400 ரூபாவிற்கும், முட்டைக்கோவா 600 முதல் 650 ரூபா வரையிலும், வெள்ளரிக்காய் 350 ரூபாவிற்கும், தக்காளி ஒரு கிலோ கிராம் 800 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் ஒரு கிலோ கிராம் பாகற்காயின் விலை 800 ரூபாவாகவும், புடலங்காய் ஒரு கிலோ கிராமின் விலை 600 ரூபாவாகவம், நுவரெலியா உருளைக்கிழங்கு 450 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ கிராமின் விலை 800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan