யோஷித மற்றும் கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கு! நீதிமன்றில் பிரதிவாதிகள் வெளியிட்ட தகவல்
இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தாம் நிரபராதிகள் என யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இலஞ்ச ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
சாட்சி விசாரணை
இதன்போது இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் திறந்த மன்றில் பிரதிவாதிகளுக்கு வாசித்து காட்டப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு தாம் இணங்கவில்லை என்றும், தாம் நிரபராதிகள் என்றும் இருவரும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, வழக்கின் சாட்சி விசாரணை ஆரம்பிக்கப்பட்டதுடன், மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யாத நிலையில், யோஷித ராஜபக்சவை இணைத்துக்கொள்வதற்காக விதிமுறைகள் மாற்றப்பட்டதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC), முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
பிரதமர் மோடியால் தங்கத்தின் விலை குறைந்தது... நன்றி சொன்ன வணிக மற்றும் தொழில் வர்த்தக சபை News Lankasri