காரில் துப்பாக்கி தோட்டாக்கள் கடத்தி மூவர் கைது..! தீவிரப்படுத்தப்படும் விசாரணை
அம்பாறை - பொத்துவில் பகுதியில் இருந்து அட்டாளைச்சேனை பகுதிக்கு கார் ஒன்றில் சட்டவிரோதமான சொட்கண் துப்பாக்கி ரவைகளை கடத்தி வந்த மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றுமுன்தினம்(24.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, 8 ரவைகள், 20 வெற்று ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி ரவைகளுடன் மூவர் கைது
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, சம்பவ தினமான நேற்றுமுன்தினம்(24) இரவு அட்டாளைச்சேனை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு சென்ற கார் ஒன்றினை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது, அதிலிருந்த 8 சொட்டகண் ரவைகள் மற்றும் 20 வெற்று ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், பாணமை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வியாபார நடவடிக்கைகளுக்காக சட்டவிரோதமாக இந்த ரவைகளை கடத்தி வந்துள்ளதாக அதிரடிப்படையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களையும் சான்றுப் பொருட்களை ஒப்படைத்துள்ளதாகவும், இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.