இலங்கையில் காற்றின் தரம் முன்னேற்றம்!
இந்தியாவிலிருந்து பரவிய நச்சுப் புகை வடகிழக்குப் பருவக் காற்றினால் விலகியதைத் தொடர்ந்து, இலங்கையின் வளியின் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக 200 வரை உயர்ந்திருந்த வளித் தரக் குறியீடு (AQI), நேற்று (நவம்பர் 24) சுமார் 50 ஆகக் குறைந்துள்ளது.
சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வளியின் தரம் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியுள்ளது.
- பத்தரமுல்லை: AQI 92 – மிதமான மாசுபாடு.
- எல்ல: AQI 119 – உணர்திறன் அதிகமுள்ளவர்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்படக்கூடும்.
- கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் AQI அளவு 200 வரை பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், குறிப்பாக சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள், காற்று மாசுபாடு அதிகமாக உள்ள பகுதிகளில் வெளிப்புறச் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.