நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் வியாபார நடவடிக்கைகள் பாதிப்பு: மல்லாவி வர்த்தகர்கள் விசனம்
முல்லைத்தீவு - துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான மல்லாவி எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்று செல்வதற்காக தரித்து நிற்கும் வாகனங்கள் கடை வீதி வாயில்களை மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வியாபார நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை
மல்லாவி வர்த்தக சங்கம், கடிதம் மூலம் துணுக்காய் பிரதேச செயலாளர் மற்றும் மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு கோரிக்கை முன்வைத்துள்ளது.
கடை வாயில்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களினால்
வர்த்தகர்களாகிய தாமும் , வாடிக்கையாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவதாக கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தமது வியாபார நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
