கோவிட் மரணங்கள் குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்!
கோவிட் தொற்றால் மரணிக்கின்ற சுமார் 30 வீத மரணங்கள் கோவிட் நிமோனியா நிலை காரணமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லேரியா மற்றும் தேசிய தொற்று நோயியல் பிரிவின் தலைமை விசேட அதிகாரி, நீதித்துறை மருத்துவ தலைமை அதிகாரி சன்ன பெரேரா இதனை தெரிவித்தார்.
கோவிட் மரணங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கைகளின் படி இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி, இதுவரை சுமார் 100 கொவிட் மரணங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றுடன் மரணித்த ஒருவரின் முதல் பிரேத பரிசோதனை 2020 மே 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. மற்றும் கொவிட் மரணங்கள் குறித்து பிரேத பரிசோதனை செய்த முதல் நாடு இலங்கை ஆகும்.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam