சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் தன்னிடம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அமைச்சரவைக்கான அறிவிப்பு
அதன்படி சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு முன் உரிய உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தமக்கு அறிவித்ததாக சபாநாயகர் கூறியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மேலும் கூறுகையில், ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள் மாநாட்டில் பங்கேற்கலாம்
எனினும் அதற்கு முன்னர் கடனாளர்களுடனான கலந்துரையாடலில் அறிக்கை உள்ளடக்கப்பட வேண்டும். இதேவேளை எல்லா தகவல்களும் கிடைத்த பிறகு அமைச்சரவைக்கு விளக்கம் அளிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆர்வமுள்ள கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று ஜனாதிபதி தன்னிடம் கூறியதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.