சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள மற்றுமொரு செய்தி
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையில் பணியாளர் மட்ட உடன்படிக்கை எட்டப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
இது இலங்கைக்கு ஒரு முக்கியமான முன்னெடுப்பு என்று அவர் கூறியுள்ளார்.
தனது டுவிட்டர் பதிவின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார்.
Very pleased that IMF staff and Sri Lankan government officials have reached a staff-level agreement to support the country’s economic policies with a 48-month Extended Fund Facility of about US$2.9 billion. This is an important step forward for Sri Lanka. https://t.co/bKikg3KDZa pic.twitter.com/Y9PBNI884I
— Kristalina Georgieva (@KGeorgieva) September 4, 2022
உடன்படிக்கை
கடந்த வியாழக்கிழமை(01) இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும், இலங்கை அதிகாரிகளும் இந்த உடன்படிக்கையை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்திருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை வெளியிட மறுக்கும் ஜனாதிபதி! வசந்த சமரசிங்க கேள்வி |
இதற்கமைய, சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 48 மாத ஏற்பாட்டுடன் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிப்பதற்கான பணியாளர் மட்ட உடன்படிக்கையே எட்டப்பட்டுள்ளது.
ரணில் அரசாங்கத்திற்கு மகிழ்ச்சி கொடுத்த சர்வதேச நாணய நிதியம்! சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு |
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது அதே நேரத்தில் நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாத்தல் மற்றும் ஊழல் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முடக்கி விடுதல் மற்றும் இலங்கையின் வளர்ச்சி திறனை வெளிப்படுத்துதலுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சர்வதேச நாணய நிதியம்! வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு |