அரச வைத்தியர்களின் போராட்டம் தீவிரம் : 48 மணிநேரத்திற்கு பின் முக்கிய தீர்மானம்
புதிய இணைப்பு
வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று(28.01.2026) கூடிய போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மேலதிக நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கான முழுமையான அதிகாரம் நிறைவேற்றுச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய தீர்மானங்கள்
அத்துடன், மத்திய செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வைத்தியசாலைகளில் கையிருப்பில் இல்லாத மருந்துகளை வெளியில் இருந்து கொள்வனவு செய்வதற்கான மருந்துச்சீட்டுகளை எழுதும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும், அரசியல் குழுக்களால் நடத்தப்படும் சுகாதார முகாம்களில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, வைத்தியர்கள் போதுமான அளவு இல்லாத வைத்தியசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்படும் விடுதிகள் மற்றும் பிரிவுகளின் கட்டிடப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
முதலாம் இணைப்பு
தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் முடிவு தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளது.
மருத்துவர்களின் போராட்டத்திற்கான முடிவு தொடர்பிலான அறிவிப்பு இன்று(28.01.2026) வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு
இன்றைய தினம் நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர், எதிர்காலத் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டார்.

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகளில் இல்லாத மருந்துகளை வெளியிலுள்ள மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்காக துண்டுச் சீட்டுகளை விநியோகிப்பதை நிறுத்துதல் உள்ளிட்ட 05 விடயங்களை முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த 5 வழிமுறைகளை முன்நிறுத்தி, கடந்த திங்கட்கிழமை காலை முதல் சங்கம் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam