கிளிநொச்சியில் அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 பிரதான வீதியில் அரச பேருந்தும், டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று(28.01.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரலாறு படைக்கும் தங்கம்: பாபா வங்கா கணிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல் - நடக்கப்போவது என்ன..!
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் - வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன் முருகண்டி பகுதியில் இருந்து மணல் ஏற்றி யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விசாரணை
குறித்த விபத்து, டிப்பர் வாகன சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அரச பேருந்தின் சாரதி, பயணிகளில் இருவர் மற்றும் டிப்பர் வாகன சாரதி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் - தேவந்தன்
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam