சர்வதேச நாணய நிதியக் குழுவினர் வட மாகாண ஆளுநருடன் சந்திப்பு

International Monetary Fund IMF Sri Lanka Northern Province of Sri Lanka Nagalingam Vedanayagam
By Thevanthan Sep 13, 2026 09:32 AM GMT
Report

வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கான தற்போதைய நிலைமை, முதலீடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் வாய்ப்புகள், ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், எதிர்நோக்கும் இடையூறுகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் விரிவாகக் கேட்டறிந்தனர்.

இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஏழாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியக் குழுவினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (12.09.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளை வரவேற்ற ஆளுநர், வட மாகாணத்தின் பொதுவான நிலைமைகள், அபிவிருத்தி முன்னேற்றங்கள் மற்றும் மாகாணம் எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் தொடர்பில் அவர்களுக்கு விளக்கமளித்தார்.

சர்வதேச நாணய நிதியக் குழுவினர் வட மாகாண ஆளுநருடன் சந்திப்பு | Imf Team Meets Northern Province Governor

தடைகள் மற்றும் தாமதங்கள்

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான நிலைமை, இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம், முதலீடுகளை ஈர்ப்பதில் காணப்படும் தடைகள் மற்றும் பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஆளுநரிடம் கேட்டறிந்தனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இலஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், முதலீடுகளுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியக் குழுவினர் வட மாகாண ஆளுநருடன் சந்திப்பு | Imf Team Meets Northern Province Governor

வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்குக் காணப்படும் வாய்ப்புகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்காக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார். அத்துடன், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரித் திட்டங்கள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடல்

சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய நலன்புரி நடவடிக்கைகள், அவற்றின் தாக்கம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்துடன் அவற்றுக்குள்ள தொடர்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், நல்லிணக்கச் செயற்பாடுகள், உலகளாவிய நெருக்கடிகளால் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், நாட்டிலிருந்து இடம்பெறும் புலம்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஆளுநருடன் விரிவாகக் கலந்துரையாடினர்.

சர்வதேச நாணய நிதியக் குழுவினர் வட மாகாண ஆளுநருடன் சந்திப்பு | Imf Team Meets Northern Province Governor

இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் வடக்கு மாகாண மக்களிடையே காணப்படும் அபிப்பிராயங்கள் மற்றும் பார்வைகள் குறித்தும் பிரதிநிதிகள் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.

சர்வதேச நாணய நிதியக் குழுவினர் வட மாகாண ஆளுநருடன் சந்திப்பு | Imf Team Meets Northern Province Governor

கனமழை பெய்யக்கூடும்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கனமழை பெய்யக்கூடும்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த இருவர் கைது

5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US