இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கத் தயார்! சர்வதேச நாணய நிதியம்
தனக்குத் தேவையான எந்தவொரு வழியிலும் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் துணை இயக்குநர் சொனாலி ஜெயின்-சந்திரா தெரிவித்துள்ளார்.
பேங்கொக்கில் நடைபெற்ற நிதியத்தின் கூட்டத்தின் போது ஊடகவியலாளர்களிடம் பேசிய சொனாலி ஜெயின்-சந்திரா, இலங்கையின் பேரண்ட பொருளாதார நிலைமை வெகுவாக மேம்பட்டுள்ளது.
அத்துடன், நிதிச் செயல்திறன் மிகவும் வலுவாக உள்ளதாகவும், கடன் மறுசீரமைப்புப் பணிகள் பெருமளவில் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம்
ஆளுமை உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புப் பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மாதத் தொடக்கத்தில், விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஏழாவது மதிப்பாய்வின் கீழ் இலங்கையுடன், சர்வதேச நாணய நிதியம் , பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியது. இதன் மூலம் இலங்கை சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு வரும் வாரங்களில், நிதியத்தின் நிர்வாக சபை ஒப்புதல் அளிக்கும் பின்னர், 2027 மார்ச் மாதத்தில் இந்த திட்டம் முடிவடைவதற்கு முன்னதாக மற்றொரு மதிப்பாய்வுக் குழு இலங்கைக்கு விஜயம் செய்யும்.
இந்த நிலையில்,குறித்த கடன் வசதி திட்டத்தைத் தாண்டியும், புதிய நிதி ஏற்பாடுகள் மற்றும் கொள்கை ஆலோசனைகள் மூலம் இலங்கை அதிகாரிகளுடன், சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து இணைந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri